கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது

கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது.

Update: 2022-10-25 18:32 GMT

கந்த சஷ்டி விழா

அரியலூரில் உள்ள பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கோலாலமாக நேற்று தொடங்கியது. இதையொட்டி காலையில் முருகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் சூரிய கிரகணத்தை முன்னிட்டு மூலவர் சன்னதியின் நடை சாத்தப்பட்டது. பின்னர் மாலையில் மீண்டும் நடை திறக்கப்பட்டது.

இதில் பட்டாடை உடுத்தி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முருகப்பெருமான், ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருள திருவீதி உலா நடந்தது. பெரிய கடைத்தெரு, சின்ன கிடைத்தெரு, சத்திரம், தட்டார தெரு வழியாக சுவாமி வந்தபோது ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

சுவாமி வீதி உலா

ஒரு வாரம் நடைபெறும் இந்த விழாவில் இன்று(புதன்கிழமை) யானை வாகனம், நாளை(வியாழக்கிழமை) குதிரை வாகனம், 28-ந் தேதி ரிஷப வாகனம், 29-ந் தேதி வெள்ளிமயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. 30-ந் தேதியன்று மாலை கோவிலின் வெளியே சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பின்பு வாணவேடிக்கை நடைபெறும். 31-ந் தேதி திருக்கல்யாணமும், நவம்பர் 1-ந் தேதி விடையாற்றி விழாவும் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்