இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவிலில் கமுகு எழுந்தருளல் நிகழ்ச்சி

இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவிலில் கமுகு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-03-30 18:45 GMT

குலசேகரம், 

இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவிலில் கமுகு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது.

நீலகேசி அம்மன் கோவில்

குலசேகரம் அருகே உள்ள இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவிலில் அம்மயிறக்கத் திருவிழா கடந்த 22-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தூக்க நேர்ச்சை 28-ந்தேதி நடந்தது. விழாவில் நேற்று கமுகு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. பாரம்பரியமாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் கோவிலின் அருகில் நின்ற ஒரு கமுகு (பாக்கு) மரத்தின் மூட்டில் பூஜைகள் நடத்தப்பட்டு மரம் பிடுங்கி எடுக்கப்பட்டது.

பின்னர் அம்மன் தரப்பினர் கமுகு மரத்தின் மூடு பகுதியையும், மாமியார் தரப்பினர் மரத்தின் கொண்டை பகுதியையும் மாறி, மாறி இழுத்தனர். பின்னர் அருகில் உள்ள குளத்தில் கமுகு மரத்தை போட்டு இரு தரப்பினரும் மாறி, மாறி இழுத்தனர். இதையடுத்து அம்மன் தரப்பினர் கமுகை கைப்பற்றி விழா பந்தலுக்கு கொண்டு சென்று நட்டனர். அதைத்தொடர்ந்து கமுகு மரத்தின் கொண்டை பகுதியில் விளக்கேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை காண திரளான மக்கள் குவிந்திருந்தனர்.

விழா நிறைவு நாளான இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு பொங்கல் வழிபாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்