பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா

விருதுநகரில் இன்று (வெள்ளிக்கிழமை) பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

Update: 2022-07-14 19:11 GMT

விருதுநகரில் இன்று (வெள்ளிக்கிழமை) பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிவிருதுநகரில் இன்று (வெள்ளிக்கிழமை) பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.றது.

பிறந்தநாள் விழா

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் பெரிய அளவில் கொண்டாடப்பட முடியாத நிலையில் இருந்தது. இந்நிலையில் அவரது 120-வது பிறந்தநாள் விழா இன்று மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளையொட்டி விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லமும், நூற்றாண்டு மணிமண்டபமும் வண்ண விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் மேகநாத ரெட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதுடன், காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

மரியாதை

காமராஜரின் நினைவு இல்லத்தில் முன்பு நூற்புவேள்வி நடைபெறுகிறது. மணிமண்டபம் இந்நகர் கச்சேரி ரோட்டில் காமராஜர் நூற்றாண்டு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். மேலும் விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு நகர சபை தலைவர் மாதவன் மற்றும் நகர சபை கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாளையொட்டி இந்நகர் தனியார் திருமண அரங்கில் சுகிசிவம் தலைமையில் காமராஜரின் நல்லாட்சி குறித்து பட்டிமன்றம் நடைபெறுகிறது. மேலும் அனைத்து பகுதிகளில் உள்ள நகர வட்டார காங்கிரஸ் கட்சி சார்பிலும் காமராஜர் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்