நெய்வத்தளி பகுதிக்கு கல்லணை தண்ணீர் வந்தடைந்தது

நெய்வத்தளி பகுதிக்கு கல்லணை தண்ணீர் வந்தடைந்தது.

Update: 2023-06-19 18:30 GMT

புதுக்கோட்டை மாவட்ட கல்லணை கடைமடை பாசனப் பகுதியான செரியலூர், வேம்பங்குடி, மேற்பனைக்காடு, நெய்வத்தளி, கோயிலூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு கடந்த 16-ந் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் மாலை வந்தடைந்தது. ஒவ்வொரு கிராமத்திலும் விவசாயிகள் மலர்கள், நெல்மணிகளை தூவி தண்ணீரை வரவேற்றனர். நேற்று ஆற்றின் முழு கொள்ளளவில் தண்ணீர் செல்கிறது. இதனால் பல கிராமங்களில் பாசன குளங்களுக்கும் தண்ணீர் நிரம்ப தொடங்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்