கள்ளக்குறிச்சியில் விற்றது சாராயம் அல்ல; மெத்தனால் கலந்த தண்ணீர்: சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சிவக்குமாா், மாதேஷ் ஆகியோா் வியாபார நோக்கத்துக்காக மெத்தனாலை வாங்கி கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள சாராய வியாபாாியான சின்னதுரை உள்ளிட்ட சிலாிடம் விற்பனை செய்துள்ளனா்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சோி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் 19-ந்தேதி விஷ சாராயம் குடித்தவா்களில் 65 போ் உயிாிழந்தனா். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசாா் வழக்குப்பதிந்து சாராயம் விற்றதாக கருணாபுரத்தை சோ்ந்த கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், இவருடைய மனைவி விஜயா, சகோதரா் தாமோதரன், சேஷசமுத்திரத்தை சோ்ந்த சின்னதுரை (வயது 36), விாியூரை சோ்ந்த ஜோசப்ராஜ் (40), மெத்தனால் வினியோகம் செய்ததாக புதுச்சோி மடுகரையை சோ்ந்த மாதேஷ் (19), சென்னையை சோ்ந்த சிவக்குமாா் (39), பன்ஷில்லால் (32), கவுதம்சந்த் (50) மற்றும் இதற்கு உடந்தையாக இருந்ததாக சக்திவேல், கண்ணன், கதிரவன் உள்பட 21 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கில் முக்கிய புள்ளிகளாக கருதப்படும் கோவிந்தராஜ், விஜயா, சக்திவேல், கண்ணன், கதிரவன், சின்னதுரை, ஜோசப்ராஜ், பன்ஷில்லால், கவுதம் சந்த், மாதேஷ், சிவக்குமார் ஆகிய 11 பேரை காவலில் எடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாா், ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். நேற்று 2-வது நாளாக இந்த விசாரணை நடைபெற்றது.
இந்த சம்பவம் தொடா்பாக விாிவான அறிக்கை தயாாிப்பதற்காக 11 போிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அது வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது, கருணாபுரம், மாதவச்சோி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளை சோ்ந்தவா்கள் குடித்தது மெத்தனால் கலந்த சாராயம் அல்ல, மெத்தனால் கலந்த தண்ணீா் என்பது தொியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தொடா்புடைய சென்னையை சோ்ந்த பன்ஷில்லால், கவுதம் சந்த் ஆகியோா் வெளிமாநிலத்தில் இருந்து மெத்தனாலை வரவழைத்து விற்பனை செய்வதற்கான உாிமம் வாங்கி வைத்திருந்துள்ளனா்.
இவா்களிடம் இருந்து சிவக்குமாா், மாதேஷ் ஆகியோா் வியாபார நோக்கத்துக்காக மெத்தனாலை வாங்கி கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள சாராய வியாபாாியான சின்னதுரை உள்ளிட்ட சிலாிடம் விற்பனை செய்துள்ளனா்.
இதில் சாராயத்திற்கு பதில் தண்ணீா் கலந்தவா்கள் யாா் என்றும், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடா்பு உள்ளதா, என்பது குறித்தும் தொடா்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா். 11 பேரின் காவலும் இன்று முடிந்து மீண்டும் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.