கள்ளக்காதலி குடும்பத்தினர் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்: தி.மு.க பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை - மனைவி போலீசில் புகார்

பொன்னேரியில் கள்ளக்காதலி குடும்பத்தினர் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதால் தி.மு.க பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக அவரது மனைவி போலீசில் புகார் அளித்தார்.

Update: 2022-12-21 06:53 GMT

பொன்னேரி நகராட்சியில் உள்ள ஜீவா தெருவில் வசிப்பவர் திவாகர் (வயது 33). இவர் தி.மு.க.வின் பொன்னேரி நகர இளைஞரணி செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ரஞ்சனி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இவர் பொன்னேரி அருகே உள்ள வேண்பாக்கம் கிராமத்தில் பிரிட்ஜ் உட்பட பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வந்தார். அவரது கடையில் 5 பேர் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு திவாகர் அரவது கடையில் யாரும் இல்லாத நிலையில் திடீரேன தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்த பொன்னேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் நிர்மலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திவாகர் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மனைவி ரஞ்சனி பொன்னேரி போலீஸ் புகார் செய்தார். அந்த புகாரில் எனது கணவருக்கும் அவரது கடையில் வேலை பார்த்து வந்த பெண் ஒருவருக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டது. கள்ளதொடர்பு குறித்து பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் திவாகரிடம் ரூ.10 லட்சம் கேட்டு எனது கணவரை மிரட்டி வந்தனர். இதனால் மன உலைச்சலில் இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தி.மு.க பிரமுகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்