காலிபிளவர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
காலிபிளவர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
பல்லடம் சுற்றுப்பகுதியிலும் மிதமான சீதோஷ்ண நிலை இருப்பதால் காலிபிளவர் சாகுபடிக்கு ஏதுவாக உள்ளதால் விவசாயிகள் காலிபிளவர் சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர். குறைந்த அளவு தண்ணீரில் விளையக் கூடிய பயிராகவும் விவசாயிகளுக்கு தினமும் ஏற்படும் பணத்தேவையை தீர்க்கும் பயிராகவும் காலிபிளவர் உள்ளது. காலிபிளவர் நாற்றுகளை, தனியார் நாற்று பண்ணைகளில் நாற்று 1-க்கு 50 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 ஏக்கருக்கு 14 ஆயிரம் முதல் 15 ஆயிரம் நாற்றுகள் வரை நடவு செய்யலாம். காலிபிளவர் சாகுபடியில் பூச்சி தாக்குதல்களுக்கு 2 முறை மருந்து தெளித்து, குறிப்பிட்டநாள் இடைவெளியில், நீரில் கரையும் உரங்களை காலிபிளவர் செடியின் வளர்ச்சிக்காக உபயோக்கின்றனர். காலிபிளவர் செடிநட்ட 80-வது நாளில் இருந்து காலிபிளவர் பூ அறுவடை செய்யலாம். தற்போது மார்க்கெட்டில் காலிபிளவர் 1 கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையாகிறது.