கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சியின் அவசர கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ராசையா, ஆணையாளர் (பொறுப்பு) லதா, மேலாளர் சண்முகவேல், நகர அமைப்பு அலுவலர் காஜாமைதீன், சுகாதார அலுவலர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் கோரிக்கை குறித்து பேசினார்கள்.