கடவூர் ஊராட்சி அலுவலகம் முன்பு கிராம மக்கள் தர்ணா

100 நாள் வேலை வேண்டி கடவூர் ஊராட்சி அலுவலகம் முன்பு கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-07 18:11 GMT

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, கீரனூர் ஊராட்சிக்குட்பட்ட தளும்பகவுண்டனூர், அணைக்கரைப்பட்டி, சீத்தபள்ளம், சேலைகட்டியூர், கட்டபுளிபட்டி, ஓந்தாகவுண்டனூர் ஆகிய கிராம மக்கள் தங்களுக்கு 100 நாள் வேலை கடந்த 3 மாதங்களாக வழங்காததை கண்டித்து கடவூர் ஊராட்சி அலுவலகம் முன்பு கடவூர் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ரவிக்கண்ணன் தலைமையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கடவூர் ஊராட்சி அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்