கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

Update: 2023-08-22 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே உள்ள குமாரபுரம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. சென்றார். அங்கு ம.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் திருமூர்த்தி தலைமையில் மாற்றுக்கட்சியினர் 50 பேர் எம்.எல்.ஏ. முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இவர்களுக்கு பொன்னாடை அணிவித்து அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்