கபடி போட்டி; பழனியாண்டவர் மகளிர் கல்லூரி முதலிடம்

பழனியில் நடந்த கபடி போட்டியில் பழனியாண்டவர் மகளிர் கல்லூரி முதலிடம் பிடித்தது.

Update: 2022-11-04 16:58 GMT

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு இடையிலான கபடி போட்டி, பழனியாண்டவர் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இதில் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த 9 அணிகள் பங்கேற்றன. 2 நாட்கள் நடைபெற்ற போட்டியில், இறுதிப்போட்டிக்கு பழனியாண்டவர் மகளிர் கல்லூரியும், ஒட்டன்சத்திரம் சக்தி கல்லூரியும் தகுதிபெற்றன.

பின்னர் நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில் 40-34 என்ற புள்ளி கணக்கில் பழனியாண்டவர் மகளிர் கல்லூரி அணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. 2-ம் இடத்தை ஒட்டன்சத்திரம் சக்தி கல்லூரியும், 3-ம் இடத்தை கம்பம் ஆதிசுஞ்சனகிரி கல்லூரியும், 4-ம் இடத்தை பல்கலைக்கழக அணியும் பிடித்தன. இதையடுத்து பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இதில் பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ், கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர். இந்த விழாவில் கல்லூரி பேரவை துணைத்தலைவர் வாசுகி, கபடி வீராங்கனை ஜீவா, உடற்கல்வி இயக்குனர் கலையரசி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்