ஜூனியர் பேட்மிண்டன் சீசன்-2 போட்டி: திருச்சி தமிழ் வீராஸ் அணி முன்னிலை

ஜூனியர் பேட்மிண்டன் சீசன்-2 போட்டியில் திருச்சி தமிழ் வீராஸ் அணி முன்னிலை வகிக்கிறது.

Update: 2023-07-13 20:13 GMT

ஜூனியர் பேட்மிண்டன்

திருச்சி ஜமால்முகமது கல்லூரி உள்விளையாட்டு அரங்கத்தில் ஜூனியர் பேட்மிண்டன் லீக் (ஜே.பி.எல். சீசன்-2) போட்டிகள் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. வருகிற 15-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 'ஏ' பிரிவில் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ், விருதை வேங்கைஸ், தஞ்சை தலைவாஸ், திருவாரூர் டெல்டாகிங்ஸ் அணிகளும். 'பி' பிரிவில் திருச்சி தமிழ் வீராஸ், ரெயின்போ ராக்கர்ஸ், கோவை சூப்பர்கிங்ஸ், மதுரை இந்தியன்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்று விளையாடி வருகின்றன.

திருச்சி தமிழ் வீராஸ் அணி முன்னிலை

நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் 'ஏ' பிரிவில் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் - விருதை வேங்கைஸ் அணிகள் மோதின. இதில் 5 போட்டிகளில் 3 போட்டிகளில் விருதை வேங்கைஸ் அணி வெற்றி பெற்றது. தஞ்சை தலைவாஸ் - சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் மோதிய ஆட்டத்தில் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் 3 போட்டிகளில் வெற்றி பெற்றது. 'பி' பிரிவில் நடைபெற்ற போட்டியில் திருச்சி தமிழ் வீராஸ் - மதுரை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் திருச்சி தமிழ் வீராஸ் அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து கோவை சூப்பர்கிங்ஸ் - திருச்சி தமிழ் வீராஸ் அணியுடன் மோதியது. இதில் திருச்சி தமிழ் வீராஸ் 3 போட்டிகளில் வென்றது.நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பெற்ற திருவாரூர் டெல்டாகிங்ஸ் - தஞ்சை தலைவாஸ் அணிகள் மோதின. இதில் திருவாரூர் டெல்டாகிங்ஸ் அணி வெற்றி பெற்றது. விருதை வேங்கைஸ் - தஞ்சை தலைவாஸ் அணிகள் விளையாடிய போட்டியில் விருதை வேங்கைஸ் அணி வெற்றி பெற்றது. 'பி' பிரிவில் கோவை சூப்பர்கிங்ஸ் - ரெயின்போ ராக்கர்ஸ் அணிகள் மோதிய போட்டியில் ரெயின்போ ராக்கர்ஸ் அணி வெற்றி பெற்றது. புள்ளிகள் பட்டியலில் 'பி' பிரிவில் இடம் பெற்ற திருச்சி தமிழ் வீராஸ் அணி 4 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்