ஜூலியஸ் கோப்பை செஸ் போட்டி- பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி
பிரக்ஞானந்தா கால்இறுதியில் ஜெர்மனியின் வின்சென்ட் ஜெய்மரை எதிர் கொண்டார்;
நியூயார்க்,
ரூ.1.21 கோடி பரிசு தொகைக்கான ஜூலியஸ் பேர் ஜெனரேசன் கோப்பை ரேபிட் செஸ் போட்டி ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. சென்னை கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா கால்இறுதியில் ஜெர்மனியின் வின்சென்ட் ஜெய்மரை எதிர் கொண்டார்.
இதில் பிரக்ஞானந்தா 1-3 என்ற கணக்கில் தோற்றார். முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவிய பிரக்ஞானந்தா அடுத்த இரு ஆட்டங்களையும் டிரா செய்தார். கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றால் டை பிரேக்கருக்கு செல்ல முடியும் என்ற சூழ்நிலை நிலவியது. ஆனால் கடைசி ஆட்டத்தில் அவர் 42-வது நககர்த்தலின் போது தோற்றார்.