ஜோலார்பேட்டை-ஈரோடு எக்ஸ்பிரஸ் ரெயில் தற்காலிகமாக நிறுத்தம்

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்கப்பட்ட ஜோலார்பேட்டை- ஈரோடு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் பராமரிப்பு பணிகளுக்காக தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2022-07-24 15:59 GMT

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்கப்பட்ட ஜோலார்பேட்டை- ஈரோடு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் பராமரிப்பு பணிகளுக்காக திங்கட்கிழமை முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தற்காலிகமாக நிறுத்தம்

தமிழகத்தில் கொரோனா தொற்று காலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திலிருந்து ஈரோடு வரை செல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்பட்டது. இநத்நிலையில் ஜோலார்பேட்டை- ஈரோடு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் கடந்த சில நாட்களுக்கு இயக்கப்பட்டது. இதனால் ெரயில் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தற்போது ஈரோடு ரெயில் நிலையத்தில் ஐந்தாவது பிளாட்பாரத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் திங்கட்கிழமை அதிகாலை 5.30 மணி முதல் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ஈரோடு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் ஈரோடு ரெயில் நிலையத்தில் காலை 10 50 அளவில் சென்றடைகிறது. பினனர் இந்த ரெயில் இன்று முதல் ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி வரை தற்காலிமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

14-ந்தேதி வரை

அதேபோல ஈரோடு ரெயில் நிலையத்திலிருந்து மாலை 4.10 மணியளவில் புறப்பட்ட ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இரவு 9.30 மணியளவில் வந்து அடைந்தது. இந்த ரெயிலும் வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி வரை தற்காலிமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளதாக ஜோலார்பேட்டை ரெயில் நிலைய மேலாளர் கணேசன் தெரிவித்தார். மேலும் பராமரிப்பு பணிகள் முடிவடைந்த உடன் வழக்கம்போல் ஜோலார்பேட்டை- ஈரோடு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்