அரசு இசைப்பள்ளியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

அரசு இசைப்பள்ளியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-03 18:45 GMT

அரசு இசைப்பள்ளியில் சேர

மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- தமிழக அரசின் கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் சிவகங்கையில் உள்ள அரசு இசைப்பள்ளியில் குரலிசை, பரதநாட்டியம், தவில், நாதசுரம், தேவாரம், மிருதங்கம், வயலின், ஆகிய பாடப் பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 12 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் இதில் சேர்ந்து படிக்கலாம். குரலிசை, பரதநாட்டியம், தேவாரம், வயலின், பிரிவுகளில் சேர 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் ஆண்களும் பரதநாட்டிய பிரிவில் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.

தவில், நாதசுவரம், வகுப்புகளில் சேர கல்வி தகுதி தேவையில்லை. 3 ஆண்டுகள் நடைபெறும் இந்த பயிற்சியில் ஆண்டுக்கு பயிற்சி கட்டணமாக ரூ.350 மட்டும் செலுத்த வேண்டும். இங்கு சேர்ந்து படிப்பவர்களுக்கு இலவச பஸ் பயண அட்டை மாதம் ரூ.400 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். அத்துடன் விடுதி வசதியும் உண்டு. விருப்பம் உடையவர்கள் சிவகங்கை பனங்காடி சாலையில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்