விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு என நூதன மோசடி

நூதன மோசடி அதிகமாக நடப்பதால் விமான நிலைய ஆணையகத்தின் சார்பில் சமூக வலைதளத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

Update: 2023-11-17 20:38 GMT

மீனம்பாக்கம்,

சென்னை விமான நிலையத்தில் வேலை வாய்ப்புகள் உள்ளதாக கூறி குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் வரும் தகவல்களை நம்பி பட்டதாரி இளைஞர்கள் பணத்தை கொடுத்து போலியான வேலை வாய்ப்பு ஆணைகளுடன் விமான நிலைய ஆணையகத்துக்கு வந்து ஏமாற்றம் அடைந்து செல்கின்றனர். இந்த நூதன மோசடி அதிகமாக நடப்பதால் விமான நிலைய ஆணையகத்தின் சார்பில் சமூக வலைதளத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

அதில், "நீங்கள் ஒரு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் அல்லது அழைப்பை பெற்று உங்களுக்கு விமான நிலைய ஆணையகத்தில் வேலை வாய்ப்பு இருப்பதாக கூறினால் கவனமாக இருங்கள். இது ஒரு மோசடியாக இருக்கலாம். இது போன்ற மோசடிகளை தவிர்ப்பதற்கு விழிப்புடன் இருப்பது மற்றும் எந்த ஒரு வேலை வாய்ப்பையும் சரிபார்ப்பது முக்கியம். விமான நிலைய ஆணையகத்தில் வேலை வாய்ப்புகளுக்கான அனைத்து காலியிடங்களும் விமான ஆணையகத்தின் அதிகாரபூர்வ தளத்தில் மட்டுமே விளம்பரப்படுத்தப்படுகின்றன" என கூறி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்