தருமபுரி மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா நினைவு நாள் கடைபிடிப்பு
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது.
ஜெயலலிதா நினைவு நாள்
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு நாள் அ.தி.மு.க. சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடைபிடிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான எஸ்.ஆர்.வெற்றிவேல் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பூக்கடை ரவி, மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன், மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். உருவச் சிலைகளுக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவினர்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், பழனி, சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் பழனிசாமி, கோவிந்தசாமி, அண்ணா பணியாளர் சங்க மாநில நிர்வாகி சின் அருள்சாமி, நகர அவைத் தலைவர் அம்மா வடிவேல், நகர துணை செயலாளர் அறிவாளி, நகர இணை செயலாளர் சுரேஷ், கூட்டுறவு சங்க தலைவர் அங்குராஜ், நகராட்சி கவுன்சிலர்கள் செந்தில்வேல், சக்திவேல், மாதேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இண்டூர்-கடத்தூர்
நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா நினைவு நாள் சோழப்பாடி, பாலவாடி, பேடரஅள்ளி, எச்சனள்ளி, இண்டூர், நத்தஅள்ளி ஆகிய பகுதிகளில் கடைபிடிக்கப்பட்டது. இண்டூரில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.சி.பழனி தலைமை தாங்கினார். இதில் பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல் கலந்து கொண்டு ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
கடத்தூர் ஒன்றிய, நகர அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா நினைவு நாள் நிகழ்ச்சி கடத்தூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் முருகன், நகர செயலாளர் சந்தோஷ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன், கடத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய இணை செயலாளர் ரவி, முன்னாள் நகர செயலாளர் சசிகுமார், ஒன்றிய கவுன்சிலர் சபுலா, நகர துணை செயலாளர் அம்பேத் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அண்ணா தொழிற்சங்கம்
தர்மபுரி மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மத்திய கூட்டுறவு வங்கி, மின்வாரிய அலுவலகம், டாஸ்மாக் அலுவலகம், தையல் கூட்டுறவு சங்கம் உள்பட பல்வேறு இடங்களில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். நகர செயலாளர் பூக்கடை ரவி, அண்ணா பணியாளர் சங்க மாநில செயலாளர் சின் அருள்சாமி, அமைப்பு சாரா அணி மாநில நிர்வாகி சிங்கராயன், தையல் கூட்டுறவு சங்க தலைவர் ஜோதி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சிகளில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி சங்க நிர்வாகிகள் வேல்முருகன், ரவி, செந்தில்குமார், மின்வாரிய பிரிவை சேர்ந்த நிர்வாகிகள் அன்பழகன், முனியப்பன், டாஸ்மாக் சங்க நிர்வாகிகள் மாது, கிருஷ்ணன், அருள், மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாப்பாரப்பட்டி
பாப்பாரப்பட்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. விவசாயிகள் பிரிவு மாநில தலைவர் டி.ஆர்.அன்பழகன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வேலுமணி, நகர செயலாளர் முனுசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் குட்டி, முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜி, பேரூராட்சி கவுன்சிலர் அண்ணாமலை, முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் மாதேஷ், முன்னாள் கவுன்சிலர்கள் கருணாநிதி, முனுசாமி, கட்சி நிர்வாகிகள் சுந்தரம், அப்புசாமி, தேவன் உள்பட பலர் கலந்து கொண்டு ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.