பஸ்சில் சென்ற பெண்ணின் நகை மாயம்

பஸ்சில் சென்ற பெண்ணின் நகை மாயம் ஆனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2023-02-12 18:45 GMT

பரமக்குடி, 

முதுகுளத்தூர் தாலுகா சாம்பக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கவிதா(வயது 43). இவர் தனது மகள் சினேகாவுடன் பரமக்குடியில் உள்ள வங்கிக்கு சென்று அவர் அடகு வைத்திருந்த 5 பவுன் நகையை மீட்டு தான் கொண்டு வந்த பையில் வைத்திருந்தார். பின்னர் அவர் அரசு பஸ்சில் ஏறி ஓட்டப்பாலம் பஸ் நிறுத்தத்தில் இறங்கியுள்ளார்.

பின்பு அருகில் இருந்த பியூட்டி பார்லருக்கு சென்று பணம் கொடுக்க பையை பார்த்த போது அதிலிருந்த 5 பவுன் செயின், ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கவிதா பரமக்குடி நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்