நகைகள் மாயம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் நகைகள் மாயமானது.

Update: 2023-05-07 18:59 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயா ரஞ்சனி (வயது 29). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் அலுவலகத்தில் பகுதி நேர ஊழியராக வேலை பார்த்து வருகிறார். தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் உள்ள பீரோவை பார்த்த போது அதிலிருந்த 2 பவுன் நகை மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்