கள்ளக்குறிச்சி அருகே திருமண விழாவில் சிறுமியிடம் நகை பறிப்பு 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

கள்ளக்குறிச்சி அருகே திருமண விழாவில் கலந்து கொண்ட சிறுமியிடம் நகையை பறித்துச் சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-06-16 16:42 GMT

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் இந்திரா நகரை சேர்ந்த செந்தில்குமார் மனைவி கவிதா (வயது 42). இவர் இன்று மாலை தனது மகள் தராஷினியுடன் (7) கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனூரில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்த தென்கீரனூரை சேர்ந்த கோபால் மகன் கிருஷ்ணகுமார், வாசு மகன் பாபராஜ் ஆகியோர் தராஷினியின் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் நகையை பறித்துக் கொண்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கவிதா கொடுத்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து, தப்பியோடிய கிருஷ்ணகுமார், பாபராஜை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்