அடுத்தடுத்து 2 கோவில்களில் ரூ.2 லட்சம் நகை திருட்டு

கிள்ளை அருகே அடுத்தடுத்து 2 கோவில்களில் ரூ.2 லட்சம் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-09-22 18:45 GMT

புவனகிரி

கிள்ளை அருகே உள்ள ராதா விளாகம் கிராமத்தில் மாரியம்மன் மற்றும் சிவன் கோவில்கள் உள்ளன. நேற்று முன்தினம் காலை பூஜைக்காக மாரியம்மன் கோவில் கதவை திறக்க முயன்றபோது கோவில் கதவு உடைக்கப்பட்டு கிடைந்ததை பார்த்து பூசாரி அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றிய தகவல் அறிந்த கிராமமக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் கிடந்த 2 பவுன் சங்கிலியை மா்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

அதேபோல் அருகில் உள்ள சிவன்கோவிலிலும் கதவு உடைக்கப்பட்டு பார்வதி அம்மன் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகை திருடு போய் இருந்தது. இதனால் நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் 2 கோவில்களிலும் புகுந்து அம்மன் கழுத்தில் கிடந்த 4 பவுன் நகைகளை திருடிச்சென்றது தொியவந்தது. திருடுபோன நகைகளின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த தகவல் அறிந்து வந்த கிள்ளை போலீசார் திருட்டு நடந்த 2 கோவில்களையும் நேரில் பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்