நரிக்குடி அருகே மூதாட்டியிடம் நகை திருட்டு
நரிக்குடி அருகே மூதாட்டியிடம் நகைைய திருடி சென்றனர்.
காரியாபட்டி
நரிக்குடி அருகே இசலி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பாயி (வயது 75). இவர் மாத்திரை வாங்குவதற்காக நரிக்குடியிலிருந்து காரியாபட்டி சென்ற அரசு பஸ்சில் ஏறி காரியாபட்டி பஸ் நிலையத்தில் இறங்கினார். அப்போது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பார்த்தபோது காணவில்லை. உடனடியாக கருப்பாயி வந்த பஸ்சில் தேடி பார்த்தார். ஆனால் நகையை காணவில்லை. இதுகுறித்து கருப்பாயி அளித்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.