பெண்ணின் வீட்டில் நகை திருட்டு

பெண்ணின் வீட்டில் நகை திருட்டு போனது.

Update: 2023-09-20 18:45 GMT

தொண்டி, 

திருவாடானை தாலுகா மங்கலக்குடி அருகே உள்ள சம்பூரணி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரியா(வயது 35). இவர் தனது 2 மகன்களுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். நேற்று காலை மகன்கள் இருவரையும் பள்ளிக்கு அனுப்பிய பிரியா வீட்டின் கதவை பூட்டிவிட்டு 100 நாள் வேலைக்கு சென்றார். இதற்கிடையே வீட்டின் முன் பக்க கதவின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்து பீரோவின் மேல் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து அதிலிருந்த 5¼ பவுன் தங்க நகைகள், ரூ.4 ஆயிரத்தை திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் திருவாடானை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்