சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 அதிகரிப்பு

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1.20 அதிகரித்துள்ளது.

Update: 2022-12-09 07:47 GMT

சென்னை,

தங்கம் விலை கடந்த 3 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.40,184-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.192 அதிகரித்து ரூ.40,376-க்கு விற்கப்படுகிறது.

நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,023-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.24 அதிகரித்து ரூ.5,047-க்கு விற்கப்படுகிறது. இதே போல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.71.30-க்கு விற்கப்பட்டது.

இன்று கிராமுக்கு ரூ.1.20 அதிகரித்து ரூ.72.5-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ வெள்ளி ரூ.72,500-க்கு விற்பனையாகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்