சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரிப்பு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்துள்ளது.
சென்னை,
சென்னை: தங்கம் விலை கடந்த 10 நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 31-ந்தேதி தங்கம் விலை பவுன் ரூ.41 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகும் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 1 பவுன் தங்கம் ரூ.41,528-க்கு விற்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு மேலும் ரூ.136 அதிகரித்து ரூ.41,664-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று கிராமுக்கு ரூ.17 அதிகரித்து ரூ.5208-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரத்தில் வெள்ளி விலை இன்று குறைந்து உள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.75.50-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 50 காசு குறைந்து ரூ.75-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.75 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.