சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு
சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.82.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.;
சென்னை,
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. அந்த வகையில் நேற்று முன்தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.46,960-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்தது.
இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.46,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ரூ.5,850-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.82.50-க்கும் ஒரு கிலோ ரூ.82,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.