ஓமலூர் அருகே பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு

ஓமலூர் அருகே பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு போனது.

Update: 2023-09-02 23:07 GMT

ஓமலூர்:

ஓமலூர் அடுத்த கணவாய் புதூர் ஊராட்சி வீராச்சியூர் மலைக்கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ராமாயி (வயது 50) இவர் கடந்த 31-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு கூலி வேலைக்கு சென்று விட்டார். பின்னர் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் ஓட்டு பிரிக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது 8 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சம்பவத்தன்று வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் பீரோவில் இருந்த நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்