அரூரில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு

அரூரில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு போனது.

Update: 2022-11-10 18:45 GMT

அரூர்:

அரூர் கோவிந்தசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி. அரசு பள்ளி ஆசிரியரான இவர் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவி ராணியுடன் உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் நகை திருட்டு போய் இருந்தது. இது தொடர்பாக ராணி அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்