பெண்ணிடம் நகை பறிப்பு

பணகுடி அருகே பெண்ணிடம் மர்மநபர் ஒருவர் நகையை பறித்துச்சென்றார்.

Update: 2022-09-25 19:42 GMT

பணகுடி:

பணகுடி அருகே உள்ள பாம்பன்குளத்தைச் சேர்ந்தவர் பதிபாலன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி இந்து (வயது 39). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இந்து தனது பிறந்தநாளை கொண்டாடிவிட்டு வீட்டில் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.

நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், இந்து அணிந்திருந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்துள்ளார். அப்போது விழித்துக் கொண்ட இந்து சங்கிலியை இறுகபிடித்துக் கொண்டார். இதில் சங்கிலி 2 துண்டானது. மர்மநபர் கையில் 5 பவுன் சங்கிலி சிக்கிக் கொண்டது. அதை பறித்துக் கொண்டு, மர்ம நபர் அங்கு இருந்து தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜீகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்