2 வீடுகளில் நகை-பணம் திருட்டு
மணப்பாறை, வளநாட்டில் 2 வீடுகளில் நகை-பணம் திருடிய மர்ம ஆசாமிகளையும், துவரங்குறிச்சியில் கோவிலில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மணப்பாறை, வளநாட்டில் 2 வீடுகளில் நகை-பணம் திருடிய மர்ம ஆசாமிகளையும், துவரங்குறிச்சியில் கோவிலில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3 பவுன் திருட்டு
மணப்பாறை பாரதியார் நகரை சேர்ந்தவர் காளமேகம் (வயது 41). இவர் நேற்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று இருந்தார். பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைந்த கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு இருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது.
இது குறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் மணப்பாறை அருகே கீழ கோரபட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (59). இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு கூலி வேலைக்கு சென்றார். பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்து ஒரு பவுன் நகை திருடப்பட்டு இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துவரங்குறிச்சி
இதே போல் துவரங்குறிச்சி அருகே அய்யனார் கோவில் பட்டியில் உத்திர காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பூஜை முடிந்ததும், பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றார். பின்னர் மறுநாள் கோவிலை திறக்க வந்போது, பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.6 ஆயிரம் மதிப்பிலான கரகம் பாலிக்க கூடியபித்தளை செம்பு, கோவில் மணி 3, அதனுடன் கூடிய பூஜை பொருட்கள் மற்றும் வரி வசூல் செய்த பணம் ரூ.10,250 ஆகியவை திருடப்பட்டு இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.