சேத்தியாத்தோப்பு அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நூதன முறையில் நகை அபேஸ் டிப்-டாப் ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு

சேத்தியாத்தோப்பு அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நூதன முறையில் நகையை அபேஸ் செய்த டிப்-டாப் ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-07-30 14:57 GMT

சேத்தியாத்தோப்பு, 

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள தட்டானோடை கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் மனைவி ஆபரணம் (வயது 70). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த டிப்-டாப் ஆசாமி ஒருவர் ஆபரணத்திடம் தான் முதியோர் உதவித்தொகை வழங்கும் அலுவலகத்தில் இருந்து வருவதாக கூறி தன்னை அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் அந்த ஆசாமி அரசு அதிகாரிகள் இங்கு வந்து ஆய்வு செய்து உதவித்தொகை வழங்குவார்கள். உங்களது காதில் அணிந்துள்ள நகையை பார்த்தால் அதிகாரிகள் உதவித்தொகை வழங்க மாட்டார்கள் எனவும், நகையை கழற்றி தாருங்கள் பேப்பரில் மடித்து தருகிறேன் எனவும் கூறினார். இதை நம்பிய ஆபரணம் காதில் கிடந்த 4 கிராம் நகையை கழற்றி அந்த ஆசாமியிடம் கொடுத்தார். அதனை பெற்ற மர்மஆசாமி நகைக்கு பதிலாக பேப்பரில் கற்களை வைத்து மடக்கி ஆபரணத்திடம் கொடுத்துவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டார். நீண்ட நேரம் ஆகியும் அதிகாரிகள் யாரும் வராததால், சந்தேகமடைந்த ஆபரணம் பேப்பரை பிரித்து பார்த்தபோது, அதில் நகைக்கு பதில் கற்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்ததோடு, தன்னை அந்த மர்மஆசாமி ஏமாற்றி சென்றதை உணர்ந்தார். இதுகுறித்து புகாரின்பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிந்து, நூதனமுறையில் மூதாட்டியை ஏமாற்றி நகையை அபேஸ் செய்து சென்ற டிப்-டாப் ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்