ஜெயேந்திரா பள்ளி ஆண்டு விழா

சுரண்டை ஜெயேந்திரா பள்ளி ஆண்டு விழா நடந்தது.

Update: 2023-01-31 18:45 GMT

சுரண்டை:

சுரண்டை ஸ்ரீஜெயேந்திரா மெட்ரிக் பள்ளியின் 28-வது ஆண்டு விழா நடந்தது. பழனி நாடார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன், துணைத்தலைவர் சங்கராதேவி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சி சங்கரா கல்வி அறக்கட்டளை டிரஸ்டி சீதாராமன் வரவேற்றார். விழாவில் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவன் ஷ்யாம் சுந்தர், 2-வது இடம் பிடித்த தனுசுயா மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி பிரியங்கா, 2-வது இடம் பிடித்த மாணவன் ஹரிஸிபம் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி விளையாட்டு விழாவில் ஒட்டுமொத்த புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்த நீல நிற அணி மற்றும் 2-வது இடத்தை பிடித்த பச்சை நிற அணியினருக்கும், கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

பள்ளி தாளாளர் பி.விஜயன் அருணகிரி, முதல்வர் ஞானமணி துரைச்சி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஆசிரியர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்