ஜெயவீர மகா காளியம்மன் கோவில் திருவிழா
ஜெயவீர மகா காளியம்மன் கோவில் திருவிழா
தொண்டி
திருவாடானை சிநேகவல்லிபுரத்தில் ஸ்ரீ ஜெயவீர மகா காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் அக்னி சட்டி, பால்குடம் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதி உலா நடந்தது. அன்னதானம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.