ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்ட பகுதியில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதை யொட்டி நடந்த அவரது உருவப்படத்திற்கு மாைல அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் அ.தி.மு.க. வினர் திரளாக பங்கேற்றனர்.

Update: 2022-12-05 19:00 GMT

மயிலாடுதுறை மாவட்ட பகுதியில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதை யொட்டி நடந்த அவரது உருவப்படத்திற்கு மாைல அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் அ.தி.மு.க. வினர் திரளாக பங்கேற்றனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி அ.தி.மு.க. சார்பில் நடந்தது. முன்னதாக திருவாரூர் சாலையில் உள்ள வீரமாகாளியம்மன் கோவிலில் இருந்து அமைதி ஊர்வலம் தொடங்கியது. இதற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பவுன்ராஜ் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராதாகிருஷ்ணன், தெற்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார், நகர செயலாளர் செந்தமிழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊர்வலம் கச்சேரிரோடு வழியாக பஸ் நிலையம் அருகே வந்தடைந்தது. பின்னர் அங்கு அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த ஜெயலலிதா படத்திற்கு நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் நாஞ்சில் கார்த்திக், மாவட்ட பேரவை இணைச் செயலாளர் முருகவேல், முன்னாள் நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மணல்மேடு நகர செயலாளர் தொல்காப்பியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செம்பனார்கோவில்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் ஜெயலலிதா நினைவு தினம் அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பவுன்ராஜ் தலைமையில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி காளகஸ்திநாதபுரம் எம்.ஜி.ஆர். சிலையில் இருந்து மவுன ஊர்வலம் நடந்தது. அதைத்ெதாடர்ந்து செம்பனார்கோவிலில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வி.ஜி.கண்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கபடி.பாண்டியன், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் நல்லாடை கண்ணன், கூட்டுறவு சங்க தலைவர் முரளி, ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் மகேந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் பிரேம்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் நாஞ்சில் கார்த்திக், தரங்கம்பாடி பேரூர் செயலாளர் கிருஷ்ணசாமி மற்றும் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

சீர்காழி

சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் ஜெயலலிதா நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. மாவட்ட அவை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாரதி தலைமை தாங்கினார். சீர்காழி நகர செயலாளர் வினோத், ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகரன், ஆதமங்கலம் ரவிச்சந்திரன், நற்குணன், சிவக்குமார், பேரூர் செயலாளர் போகர். ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் பாரதி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து ஏழை பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த நடராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புதிய பஸ் நிலையம் வரை அமைதி ஊர்வலம் நடந்தது. இதேபோல் கொள்ளிடம் கடைவீதியில் ஜெயலலிதா நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நற்குணன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் பாரதி கலந்து கொண்டு ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட மீனவர் அணி செயலாளர் நாகரத்தினம், நிர்வாகிகள் ராஜேந்திரன், பூவராகவன், சொக்கலிங்கம், பாலதண்டாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்