மஞ்சப்பை பயன்பாடு விழிப்புணர்வு கூட்டம்
சங்கராபுரம் பேரூராட்சியில் மஞ்சப்பை பயன்பாடு விழிப்புணர்வு கூட்டம்
சங்கராபுரம்
சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சங்கராபுரம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மஞ்சப்பையை பயன்படுத்துவது குறித்த அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் அனைத்து அமைப்புகளுடனான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி தலைவர் ரோஜாரமணிதாகப்பிள்ளை தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆஷாபீஜாகிர் உசேன், வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் சேகர், பொது சேவை அமைப்பு தலைவர் ஜோசப்சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் ஜெயப்பிரகாஷ் வரவேற்றார்.
கூட்டத்தில் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை கடைகளில் விற்பனை செய்வதை தவிர்ப்பது, அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார் விளக்கி கூறினார். இதில் பள்ளி தலைமையாசிரியர் சீனிவாசன், பேரூராட்சி கவுன்சிலர்கள் உமா, சாபிருன்நிஷா, இம்தியாஸ், சிவக்குமார், கோபு, கவிதா, அனைத்து வியாபாரிகள் சங்க கவுரவ தலைவர் ரவி, சங்க நிர்வாகிகள் துரை, சுதாகர், நாசர் மற்றும் கவுன்சிலர்கள், அனைத்து வியாபார சங்க நிர்வாகிகள், பொது சேவை அமைப்பினர், பேரூராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.