கூலமேட்டில் நாளை ஜல்லிக்கட்டு-ஏற்பாடுகள் தீவிரம்
கூலமேட்டில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
ஆத்தூர்:
ஜல்லிக்கட்டு
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கூலமேடு கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் நாளை (சனிக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. இதில் சேலம், திருச்சி, கரூர், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்வர். அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகளும் கலந்து கொள்ளும்.
ஏற்பாடு
நாளை நடக்கும் இந்த போட்டியை 25 ஆயிரம் பேர் பார்த்து ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜல்லிக்கட்டு போட்டிக்கான வாடிவாசல் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை போட்டி ஏற்பாட்டாளர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.