பொங்கலூர் அருகே அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி 23-ந் தேதி நடக்கிறது. இதில் கலந்து கொள்ள 2 நாட்களில் 450 மாடு பிடி வீரர்கள் முன்பதிவு ெசய்துள்ளனர்.

பொங்கலூர் அருகே அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி 23-ந் தேதி நடக்கிறது. இதில் கலந்து கொள்ள 2 நாட்களில் 450 மாடு பிடி வீரர்கள் முன்பதிவு ெசய்துள்ளனர்.

Update: 2023-04-17 13:46 GMT

பொங்கலூர்

பொங்கலூர் அருகே அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி 23-ந் தேதி நடக்கிறது. இதில் கலந்து கொள்ள 2 நாட்களில் 450 மாடு பிடி வீரர்கள் முன்பதிவு ெசய்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு

பொங்கலூர் அருகே அலகுமலையில் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டியில் நடைபெற்று வருகிறது. கொரோனாவையொட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் வரும் 23-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு கேலரிகள் அமைக்கும் பணிகள், வாடிவாசல் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

மேலும் போட்டியில் கலந்து கொண்ட மாடுகளை பிடிப்பதற்கான தனி இடமும் அதன் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டு வருகிறது.

முன்பதிவு

இந்த நிலையில் கடந்த 17-ந் போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாடுபிடி வீரர்கள் முன்பதிவு பணி தொடங்கியது. இதனை தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலுசாமி தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் தலைவர் லீடர் டேப் பழனிசாமி, பொருளாளர் சுப்ரமணியம் ஆகிய முன்னிலை வகித்தனர். கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற முன்பதிவில் மொத்தம் 450 மாடுபிடி வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்