வாலிபருக்கு சாகும் வரை சிறை

சிறுமி தீக்குளித்து இறந்த வழக்கில் வாலிபருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2023-03-27 19:26 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை, கோவில்பட்டியை சேர்ந்த விக்கி என்ற விக்னேஸ்வரன் (வயது 23) என்பவர் புகைப்படம் எடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சிறுமி கடந்த 5.2.2022-ல் தனது வீட்டில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் தீக்காயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிவகாசி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து விக்னேஸ்வரனுக்கு சாகும்வரை சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்