திருட்டு வழக்கில் 3 சிறுவர்களுக்கு ஜெயில் சேலம் கோர்ட்டு தீர்ப்பு
திருட்டு வழக்கில் 3 சிறுவர்களுக்கு ஜெயில் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு கூறப்பட்டது.
சேலம்,
மோட்டார் சைக்கிள் திருட்டு
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த 16 வயது சிறுவன், கடந்த ஆகஸ்டு மாதம் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் தலைவாசல் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி கமலக்கண்ணன் தீர்ப்பு அளித்தார்.
3 ஆண்டு ஜெயில்
இதே போன்று சேலம் 5 ரோட்டை சேர்ந்த பிரவீன் என்பவர் மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிச்சிப்பாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர். அதே போன்று சேலம் குகை பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மொபட் திருட்டு குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விருத்தாசலத்தை சேர்ந்த 17 வயது சிறுவனை கைதுசெய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சேலம் கோர்ட்டில் நடந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த சிறுவனுக்கு ஒரு வருடமும், விருத்தாசலத்தை சேர்ந்த சிறுவனுக்கு 3 வருடமும் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.