தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது

Update: 2023-06-06 18:45 GMT

சிவகங்கை மாவட்டம் பழையனூரை அடுத்துள்ள கிள்ளுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 53). விறகு வெட்டும் தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இது தொடர்பாக அந்த சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் பழையனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். பின்னர் சக்திவேல் மீது சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிபதி சரத் ராஜ், சக்திவேலுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10,500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்