மூதாட்டிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு ஒரு ஆண்டு சிறைசேந்தமங்கலம் கோர்ட்டு தீர்ப்பு
சேந்தமங்கலம்:
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள பேளுக்குறிச்சி ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 37). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராஜை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு சேந்தமங்கலம் குற்றவியல் கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தங்கராஜிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிஹரன் தீர்ப்பளித்தார்.