ஈரோட்டில் விற்பனைக்கு குவிந்த பலாப்பழங்கள்

ஈரோட்டில் பலாப்பழங்கள் விற்பனைக்கு குவிந்தன.

Update: 2023-05-20 21:22 GMT

பலாப்பழம் சீசன் தொடங்கி உள்ளது. தாளவாடி, பர்கூர் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து ஈரோட்டுக்கு பலாப்பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. ஈரோடு சத்தி ரோடு, ஈ.வி.என்.ரோடு, ஆர்.கே.வி.ரோடு, காளைமாட்டுசிலை, பவானிரோடு, பெருந்துறைரோடு உள்பட பல்வேறு முக்கிய சாலைகளின் ஓரங்களில் பலாப்பழ கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பொதுமக்களும் ஆர்வமாக பலாப்பழங்களை வாங்கி செல்கிறார்கள். கடந்த ஆண்டை காட்டிலும் பலாப்பழம் விலை குறைந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்