ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று முதல் செயல்படும்

தென்காசியில், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று முதல் செயல்படும்;

Update: 2023-08-06 19:00 GMT

தென்காசியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் புதிதாக கட்டி திறக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த வளாகத்தில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம், முதன்மை சார்பு நீதிமன்றம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆகியவை செயல்பட்டு வருகிறது.

தென்காசி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு தென்காசியில் முதன்மை மாவட்ட நீதிமன்றம் மற்றும் முதன்மை குற்றவியல் நீதிமன்றங்கள் அமைய அரசாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதனை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் திறக்க ஏதுவாக, பிற நீதிமன்றங்கள் ஏற்கெனவே செயல்பட்டு வரும் கட்டிடங்களிலேயே தொடர்ந்து செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் தென்காசி தாலுகா அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாற்றி அமைக்க வக்கீல்கள் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தன. இதனை ஏற்று தென்காசி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு இன்று (திங்கட்கிழமை) முதல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு செயல்படும் என்று நெல்லை முதன்மை மாவட்ட நீதிபதி சீனிவாசன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்