பிரதமரிடம் செங்கோலை வழங்கியது மயிலாடுதுறைக்கு கிடைத்த பெருமை

திருவாவடுதுறை ஆதீனம் பிரதமரிடம் செங்கோலை வழங்கியது மயிலாடுதுறைக்கு கிடைத்த பெருமை பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் பேட்டி

Update: 2023-05-28 18:45 GMT

மயிலாடுதுறையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த பா.ஜ.க.. மாநில துணைத்தலைவர் திருப்பதி நாராயணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:திருவாவடுதுறை ஆதீனம் பிரதமரிடம் செங்கோலை வழங்கியது மயிலாடுதுறைக்கு கிடைத்த பெருமை. தமிழுக்கு சூட்டப்பட்ட பெருமையை உலகில் எல்லாமொழியும் பேசுகிறவர்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். திருவாவடுதுறை, தருமபுரம் உள்பட அனைத்து ஆதீனங்களும் தமிழர்களின் பொக்கிஷங்களை பாதுகாத்து வருகின்றனர். தமிழுக்கு பெருமை சேர்க்கக்கூடிய விஷயத்தில் தி.மு.க. அரசு இப்படி இருந்திருப்பது கண்டனத்திற்கு உரியது.இந்தியாவில் மதசார்பற்ற ஒரு கட்சி என்றால் அது பா.ஜ.க.தான். 3 மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து கேள்வி கேட்டிருக்கிறது மருத்துவ ஆணையம். நல்ல டாக்டர்களை உருவாக்குவதுதான் நம்முடைய பணியாக இருக்க வேண்டும். தேவையின்றி மத்திய அரசு, மருத்துவ ஆணையத்தை குறைசொல்வது சரியில்லை. இவ்வாறு அவர் கூறினார் அப்போது பா.ஜ.க. மாவட்ட தலைவர் அகோரம், மத்திய அரசு வக்கீ்ல் ராஜேந்திரன், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் கோவி சேதுராமன், மாவட்ட பொதுச்செயலாளர் நாஞ்சில் பாலு, நகர தலைவர் வினோத் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்