ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.55 லட்சத்தை இழந்த ஐ.டி. ஊழியர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை
ராணிப்பேட்டையை சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.55 லட்சத்தை இழந்்தார். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டையை சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.55 லட்சத்தை இழந்்தார். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைன் சூதாட்டம்
ராணிப்பேட்டையை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் தற்போது வீட்டில் இருந்தபடியே பணிகளை செய்து வருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்- அப் எண்ணிற்கு ஒரு லிங்க் வந்தது. அதனை இவர் ஓபன் செய்ததும், டெலிகிராம் செயலிக்கு சென்றது. எதிர் முனையில் இருந்த நபர் பகுதிநேர வேலை தருவதாகவும், அதற்காக ரூ.1,000 செலுத்துங்கள் என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
அதனை நம்பி பணம் கட்டினார். உடனடியாக பணம் இரட்டிப்பாக வந்தது. பின்னர் 5 நிலையை அடைந்தால், அதிக அளவில் பணம் கிடைக்கும் என சவால் கேள்விகள் கேட்கப்பட்டது. அதிலும் அவர் பதில் அளித்து பணம் சம்பாதித்தார்.
ரூ.55 லட்சம் இழப்பு
அடுத்தடுத்து நிலைமாறி கேள்விகள் கேட்கப்பட்டது. பதில் தெரியாமல் பணத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இழந்த பணத்தை எப்படியாவது பிடிக்க வேண்டும் என அடுத்தடுத்து விளையாடியதால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தார்.
மேலும் நண்பர்களிடம் கடன் வாங்கி மீண்டும் அதே விளையாட்டை விளையாடி இருக்கிறார். அப்போதும் விளையாட்டில் தோற்று ரூ.55 லட்சம் வரை இழந்து விட்டார். இது குறித்து அவர் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.