2 நாட்கள் நடக்கிறது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் கலெக்டர் தகவல்

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் 2 நாட்கள் நடைபெற உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-12 18:45 GMT

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 11 லட்சத்து 22 ஆயிரத்து 734 வாக்காளர்கள் உள்ளனர். இதுவரை 75 சதவீதம் வாக்காளர்களின் ஆதார் எண் வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 25 சதவீத வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்காமல் உள்ளனர். இதையொட்டி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நாளை மறுநாள்(சனிக்கிழமை) மற்றும் 16-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

இம்முகாமில் இதுவரை ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்காதவர்கள் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஆதார் விவரத்தை அளித்து வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ளலாம். மேற்கண்ட தகவல் .கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்