திருவள்ளூர் மாவட்டத்தில் 5 மையங்களில் நடைபெறுகிறது: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு 5,548 பேருக்கு இன்று எழுத்து தேர்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் 5 மையங்களில் நடைபெற உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 5,548 பேர் எழுதுகின்றனர்.;

Update:2022-06-25 13:07 IST

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத் தேர்வு 5 மையங்களில் நடைபெறுகிறது. அதன்படி திருப்பாச்சூரில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் 1,309 ஆண்கள் தேர்வு எழுதுகின்றனர்.

இந்த தேர்வு மையத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் என மொத்தம் 120 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதே போல் திருவள்ளூர் அடுத்த பாண்டூரில் உள்ள இந்திரா பொறியியல் கல்லூரியில் 700 ஆண்கள் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வு மையத்தில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் என மொத்தம் 80 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

திருவள்ளூர் அடுத்த காக்களூரில் உள்ள கலவல கண்ணன் செட்டி இந்து மேல் நிலைப் பள்ளியில் 1,300 ஆண்கள் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வு மையத்தில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் என மொத்தம் 117 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதே போல் திருவள்ளூர் ராஜாஜிபுரத்தில் உள்ள ஸ்ரீநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 1300 ஆண்கள் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வு மையத்தில் இன்ஸ்பெக்டர், சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் என மொத்தம் 119 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

அதே போல் திருத்தணியில் உள்ள ஜி.ஆர்.டி. பொறியியல் கல்லூரியில் 939 பெண்கள் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வு மையத்தில் 96 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஆக 5 தேர்வு மையங்களில் நடைபெறும் இந்த எழுத்துத் தேர்வின் போது, தேர்வு மைய அறை, கட்டிடம் வெளியே பாதுகாப்பு போன்ற பணிகளில் மொத்தம் 532 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்