தமிழ்நாட்டில் பணியாற்றுவது கவுரவமானது - சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா
தமிழ்நாட்டில் பணியாற்றுவது கவுரவமானது என சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா கூறினார்.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி. கங்காபூர்வாலா கடந்த சில தினங்களுக்கு முன்பு பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை ஐகோர்ட்டின் சார்பாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், பேசிய கங்கா பூர்வாலா, சான்றோர்களையும், கலை, கலாச்சார செறிவையும் கொண்ட தமிழ்நாட்டில் பணியாற்றுவது கவுரவமானது என்று கூறினார்.
மேலும், தமிழ்நாட்டின் மரபு மற்றும் கலாச்சாரங்களை பின்பற்றி உங்களை போல் வாழ்வேன் என்றும் அவர் கூறினார்.