கும்பகோணம்:
நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பா.ஜ.க. நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்தி கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம், வலங்கைமான் வட்டார ஜமாத்தார்கள், ஜமாத்துல் உலாமா சபை மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கும்பகோணம் வட்டார ஜமாத் தலைவர் சம்சூதீன் தலைமை தாங்கினார். ஜமாத் தலைவர்கள் ஷாஜகான், யூசுப்அலி, ஹசன் பசீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அப்துல்சமது எம்.எல்.ஏ, வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி.ஆர்.லோகநாதன், கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் மா.செல்வம் மற்றும் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பா.ஜ.க. நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.