தமிழ்நாடு அமைச்சரவை மாற்றமா? கேள்வி 'யாமறியேன் பராபரமே' அமைச்சர் துரைமுருகன் பதில்...!
தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்படுகிறதா? என்று அமைச்சர் துரைமுருகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
சென்னை,
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இது குறித்து அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். கவர்னரை சந்திக்க உள்ளதாக வெளியான தகவலுக்கு துரைமுருகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக துரைமுருகன் கூறுகையில், கவர்னரை சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை. நானே நெல்லையில் இருந்து இன்று காலை தான் சென்னை வந்தேன்.
தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்படுகிறதா? என்ற கேள்விக்கு 'யாமறியேன் பராபரமே' என அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
அமைச்சரவையில் ஏதேனும் மாற்றம் உள்ளதா? என்பதை தெரிவிக்கவேண்டியவர் முதல்-அமைச்சர். அமைச்சரவை மாற்றம் குறித்து எனக்கு இதுவரை எந்த தகவலும் வரவில்லை. அமைச்சரவை மாற்றத்திற்கான நிலை இன்னும் வரவில்லை' என்றார்.